திங்கட்கிழமை தோறும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் உத்தரவு


திங்கட்கிழமை தோறும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 April 2018 5:30 AM IST (Updated: 15 April 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

உத்தமபாளையம்,

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்து வருகின்றனர். சிலர், தொலைதூரத்தில் இருந்து மனு கொடுப்பதற்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள்.

இவர்களின் சிரமத்தை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 2 ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகத்தில் நடப்பதை போல வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகா பகுதிகளில் வசிக்கிற மக்கள் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், பெரியகுளம், தேனி தாலுகாக்களில் வசிப்போர் பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் மனு கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story