அழகுப் போட்டியில் பங்கு பெற்ற ஆவேச காளைகள்
பெண்களின் அழகை ஆராதிக்கும் வகையில் அழகு ராணி போட்டிகளும், கட்டுடல் கொண்ட ஆண் மகன்களை அடையாளப்படுத்தும் விதமாக ஆணழகன் போட்டிகளும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.
செல்லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கு கூட அழகுப்போட்டி நடத்தப்படுவது வழக்கமாகி விட்டது. அதுபோல் விவசாயிகளின் உற்ற தோழனான கம்பீர காளைகளையும், பால் தரும் பசுக்களையும் அழகுப்படுத்தி பார்வையாளர்களுக்கு முன்பு ஒய்யாரமாக அழைத்து வந்து அழகுப்போட்டி நடத்தி கிராம மக்கள் அசத்தியிருக்கிறார்கள்.
பாரம்பரியமிக்க காங்கேயம் இன கால்நடைகளை பாதுகாக்கவும், நாட்டு மாடுகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த அழகுப் போட்டி அரங்கேறி இருக்கிறது. போட்டி நடந்த இடம் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் கிராமம். அங்குள்ள மாகாளியம்மன் கோவில் திரு விழாவின் ஒரு அங்கமாக அழகுப் போட்டியை நடத் தியிருக்கிறார்கள்.
அங்குள்ள மண்டபத்தில் கிராம மக்கள் குழுமி யிருக்க, காளைகளும், பசுக்களும் சாரை சாரையாக கொண்டு வரப்பட்டன. அதில் கம்பீரத்துக்கு பெயர் பெற்ற காங்கேயம் காளைகள் வயது வாரியாக அணி வகுத்து நிறுத்தப்பட்டன. பூச்சிக்காளைகள், இளம் பூச்சிக்காளைகள், எருது, வண்டிக்காளை, மயிலை பசுக்கள், காரி பசுக்கள், செவலை பசுக்கள், கிடாரிகள் என ஒவ்வொரு பிரிவாக காளை இனங்கள் வகைப் படுத்தப்பட்டு அழகுப்போட்டி நடத்தப்பட்டது.
காளை, பசுக்களின் கூரிய கொம்புகளுக்கு வர்ணம் பூசியும், கழுத்தில் மணி, கலர் கலராக மூக்கணாங்கயிறு அணிவித்தும் அழகுபடுத்தி அழைத்து வந்தார்கள். பார்வையாளர்களுக்கு மத்தியில் காளைகளை பிடித்து வந்த காளையர்கள் ‘எங்கள் காளைதான் அழகில் சிறந்தது’ என்று கர்வம் கொள்ளும் வகையில் போட்டிக்கு தயார்படுத்தியிருந்தனர். பசுக்களும், காளை களின் கம்பீரத்துக்கு இணையாக அலங்காரத்தில் ஜொலித்தன.
பார்த்தாலே மிரட்சியை ஏற்படுத்தும் காளைகளை பெண்கள் சர்வ சாதாரணமாக அழைத்து வந்தது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. ஜல்லிக்கட்டு களத்தில் மாடுபிடி வீரர்களை சிதறடிக்கும் காளைகள், பெண்களின் ஒவ்வொரு அசைவுக்கும் கட்டுப்பட்டு குழந்தையை போலவே பவ்வியம் காட்டியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிரள வைக்கும் ஆக்ரோஷத்தில் சீறி பாய்ந்து வரும் காளைகளையே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அமைதி கலந்த அழகு அலங்காரத்தில் அணி, அணியாக வலம் வந்த காளைகளை பார்த்து பரவசமடைந்தார்கள்.
கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து அழகான காளை, பசு மாடுகளை மதிப்பெண் போட்டு தேர்வு செய்தனர். காளை, பசுக் களின் ஒவ்வொரு அங்கத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. காங்கேயம் மாடுகளுக்கான இன கோட் பாடுகளை வகுத்து அதன்படி மதிப்பீடு செய்தனர். மாடுகளின் முக அமைப்பு, கொம்பு அமைப்பு, திமில் வடிவம், வால் முடி குவிந்து இருக்கும் தன்மை போன்றவைகளை கணக்கிட்டு மதிப்பெண் அளித்தனர். பசுக்களுக்கு அதன் மடி வரை கவனித்து பார்த்து மதிப்பெண் கொடுத்தனர். ‘ஸ்டீல் கிரே’ என்று சொல்லக்கூடிய வெள் ளையுடன் கருப்பு கலந்த இனமே தரத்தில் முதன்மை யானதாக கருதப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற பசு, காளைகளுக்கு ஜல்லிக் கட்டு போட்டியில் வழங்கப் படுவதுபோன்றே ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் மட்டு மின்றி கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தஞ் சாவூர் போன்ற பகுதிகளில் இருந்தும் காளைகள் அழகு ப்போட்டி யில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. பரிசு பெறுவதை விட, தங்க ளுடைய காளை, பசுக்களை பார்வையாளர்கள் முன் நிறுத்தி, அவற்றின் கம்பீர அழகை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதையே உரிமையாளர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.
அழகுப்போட்டி பற்றி ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது, ‘‘காங்கேயம் இன கால்நடைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். அருகி வரும் பட்டியலில் இருந்து காங்கேயம் இனத்தை மீட்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அழகுப் போட்டியை முதன் முறையாக நடத்தியுள்ளோம். இங்கு வந்த பார்வையாளர்களில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். தற்போது இளைஞர்களிடம் காங்கேயம் இன மாடுகளை வளர்க்கும் ஆர்வம் பெருகிவருகிறது. இது பெருமைக்குரிய விஷயமாகும். எங்களோடு இந்த மாட்டினம் அழியக்கூடாது. இன்னும் பல்லாண்டுகள் வருங்கால சந்ததியினருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோல் அழகுப் போட்டியை நடத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.
காங்கேயம் இன மாடுகளை பாதுகாத்து வளர்ப்பதில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த காளை அழகுப் போட்டி!

Related Tags :
Next Story