காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பவானி, சிவகிரி பகுதியில் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பவானி, சிவகிரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதை அமைக்கக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நடந்து வருகிறது. அதன்படி பவானி லட்சுமிநகர் பைபாஸ் ரவுண்டானா அருகில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் விஜியகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பவானி காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க கவுரவ தலைவர் ராமசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் யூ.எம்.ஈஸ்வரமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சுதந்திர சிறகுகள் சமூக நல இயக்கம் சார்பில் சிவகிரி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், இளைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story