புதுக்கோட்டை, அறந்தாங்கியில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டை, அறந்தாங்கியில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை,

காஷ்மீரில் சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகம்மது சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் முன்னிலை வகித்தார். மனிதநேயமக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்கனி, ஆம் ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் அருண்மொழி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட செயலாளர் கிரீன் முகமது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகதைசெய்யது முன்னிலை வகித்தார். இதில் திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர் ஹுமாயூன்கபீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story