மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன் பிடி தடைகாலம் தொடங்கியது
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைகாலம் தொடங்கியது.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக இருந்து வந்தது. இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியா குமரி வரை தமிழக விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது.
இந்த ஆண்டின் தடை காலம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ராமேசுவரத்தில் மட்டும் 900-த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து ராமேசுவரம், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன.
தடைகாலம் தொடங்கியதால் ராமேசுவரம் பகுதியில் மீனவர்கள் படகுகளில் இருந்து மீன் பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், கயிறு உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டுசென்றனர். சில மீனவர்கள் படகுகளை மராமத்து செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் தடைகாலம் இல்லாததால் சிலர் அங்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லலாம் என்பதால் அதில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இதுபற்றி ராமேசுவரம் மீன்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மீன் பிடி தடை காலம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கன் வழங்கப் படமாட்டாது. நாட்டுப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயம் அடையாள அட்டையுடன் செல்லவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story