சின்னசேலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்த ரூ.15 லட்சம் மாயம், போலீசார் விசாரணை
சின்னசேலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்த ரூ.15 லட்சம் மாயமானது. இது தொடர்பாக பணம் நிரப்பிய 3 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் காலியானது.
இதையடுத்து ஒப்பந்த ஊழியர்கள் 23 லட்சம் ரூபாயை அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பினர். பின்னர் 12-ந் தேதி 10 வாடிக்கையாளர்கள் மட்டுமே அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததாக தெரிகிறது. அதன்பின்னர் வாடிக்கையாளர்கள் யாரும் பணம் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏ.டி.எம். மையத்தில் இருந்து புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுபற்றி கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் விழுப்புரம் மண்டல மேலாளர் ராமராஜன் மற்றும் வங்கி ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மின்கசிவு காரணமாக புகை வந்ததா என சோதனை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.6 லட்சம் மட்டுமே இருந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விவரங்களை சோதனை செய்த போது, சுமார் ரூ.15 லட்சம் வரை குறைந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் இதுகுறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் ஒப்பந்த அடிப்படையில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் ஊழியர்கள் 3 பேரை பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story