பட்டாசு வேதிப்பொருள் கலவை பணியில் புதிய தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது, அதிகாரி அறிவுறுத்தல்
பட்டாசு ஆலைகளில் வேதிப்பொருள் கலவை பணியில் புதிய தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுப்பது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் பேசும்போது கூறியதாவது:-
பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு கூட்டம் நடந்த பின்னரும், விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை. அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தொழிலாளர்களின் கவனக்குறைவு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போர்மென்கள் இல்லை. ஒரு போர்மென் 2 ஆலைகளில் வேலை செய்யும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தவிர்க்க வேண்டும். அனைத்து ஆலைகளிலும் உரிய போர்மென்கள் நியமிக்க ஆலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். உற்பத்தி நல்ல முறையில் நடக்கிறது. ஆனால் பாதுகாப்பில் மட்டும் தொழிலாளர்கள் கோட்டை விடுகிறார்கள். பெரும்பாலான விபத்துகள் தொழிலாளர்களின் அஜாக்கிரதையால் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு கூட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி சரவணன் பேசியதாவது:-
வேதிப்பொருட்களை காலை 8 மணியில் இருந்து 10 மணிக்குள் கலவை செய்திட வேண்டும். வெடி விபத்துகள் ஏற்பட முக்கிய காரணங்கள் உராய்வு, வீரியம் மிக்க கலவை, அழுத்தம், வெப்பம் ஆகியவை ஆகும். அனுபவம் மிக்கவர்களைக் கொண்டு வேதிப்பொருட்கள் கலவையை செய்ய வேண்டும். புதியவர்களை வேதிப்பொருட்கள் கலவை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
தினமும் காலையில் பட்டாசு உற்பத்தி பணியை தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். போர்மென் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். ஒரு அறையில் விதியின்படி எத்தனை நபர்கள் அனுமதிக்க வேண்டுமோ அத்தனை நபர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அதிக ஆட்களை பயன்படுத்தக்கூடாது. உற்பத்தியில் செலுத்தப்படும் கவனத்தை பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும். விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. மங்கள ராமசுப்பிர மணியம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சாதுகான், கருணாடே பாண்டே, துணை இயக்குனர் (சுகாதாரத்துறை) ராம்கணேஷ், டான்பாமா தலைவர் ஆசைதம்பி, தாசில்தார்கள் ஸ்ரீதர் (சிவகாசி), ராமநாதன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), சாந்தி (சாத்தூர்), ராஜ்குமார் (வெம்பக்கோட்டை), பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் இப்ராகிம்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், போர்மென்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story