மாநில வளர்ச்சிக்காக கவர்னரோடு அரசும் இணைந்து செயல்படுகிறது - அமைச்சர் கந்தசாமி பேச்சு
மாநில வளர்ச்சிக்காக கவர்னரோடு அரசும் இணைந்து செயல்படுகிறது என அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை,
கிருமாம்பாக்கம் படகுகுழாம் திறப்பு விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது;-
கடந்த ஆட்சியில் திட்டங்களுக்கு அப்போதிருந்த கவர்னர் உடனடி ஒப்புதல் அளித்தார். தற்போது கோப்புகள் அனுப்பினால், ஆய்வு, ஆலோசனை, கலந்துரையாடல் நடக்கிறது. இதனால், திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஆகிறது என்றார். உடனே, கவர்னர் கிரண்பெடி குறுக்கிட்டு யாரையும் ஒப்பிட்டோ, அரசியலோ பேசவேண்டாம் என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட்டார். உடனே, அமைச்சர் கந்தசாமி, 2 நிமிடங்கள் பொறுத்திருக்கவும், அரசின் நிலையை மக்களிடம் கூற வேண்டும் என்று தனது பேச்சை தொடர்ந்தார்.
புதுவை மாநில வளர்ச்சிக்காக, கவர்னரோடு அரசும் தற்போது இணைந்து செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய இலவச அரிசி குறித்து ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) நடக்க இருப்பதாக கவர்னர் தற்போது தெரிவித்துள்ளார். அமைச்சரவையும், கவர்னரும் இணக்கமாக செயல்பட்டால் தான் புதுவை மாநிலம் மிக விரைவில் வளர்ச்சியடைய முடியும்.
மத்திய அரசால் கவர்னர் நியமிக்கப்படுகிறார். ஆனால் நானோ பொதுமக்களால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறேன். எனவே தன்னிச்சையாக யாராலும் செயல்பட முடியாது. பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய செயல்பாடுகளை விரைவில் செய்து தருவோம் இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து கவர்னரும், அமைச்சரும் அங்கிருந்து காரில் புறப்பட்டுச்சென்றனர்.

Related Tags :
Next Story