வான்கடே மைதானத்தில் ஆசிரியை மானபங்கம்; ஒருவர் கைது


வான்கடே மைதானத்தில் ஆசிரியை மானபங்கம்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-16T03:56:46+05:30)

மும்பை வான்கடே மைதானத்தில் ஆசிரியையை மானபங்கம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை வான்கடே மைதானத்தில் ஆசிரியையை மானபங்கம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டி

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன் தினம் மும்பை - ஐதராபாத் இடையேயான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியை காண கோரேகாவ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை சென்று இருந்தார். இவர் போட்டி முடிந்து 8.10 மணியளவில் சச்சின் தெண்டுல்கர் ஸ்டாண்டு லெவல் 2 பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு தண்ணீர் பாட்டில் விற்பவர் ஒருவர் வந்தார்.

தண்ணீர் வேண்டுமா என கேட்டு ஆசிரியையிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். இருப்பினும் அதை பொறுப்படுத்தமால் ஆசிரியை அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆசிரியை மானபங்கம்

இந்தநிலையில் ஆசிரியையை பின்தொடர்ந்து வந்த அவர் திடீரென அவரை பின்னிருந்து தொட்டு மானபங்கம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஆசிரியையை மானபங்கம் செய்தவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், அவர் கிரிக்கெட் மைதானத்தில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் ஜிந்ராஜ் டடுலால் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிந்ராஜ் டடுலாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story