விமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணி
இந்திய ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப்பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.எ.எல்.) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய ராணுவத்துக்குத் தேவையான விமானங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பு, பழுதுபார்த்தல் போன்ற பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்ட தாரிகளையும், டிப்ளமோ படித்தவர்களையும் அப்ரண்டிஸ் பயிற்சிப்பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 103 இடங்களும், டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு டிப்ளமோ படித்த 137 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 240 இடங்கள் நிரப்பப்படுகின்றன. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட என்ஜினீயரிங், தொழில்நுட்பம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பயிற்சிப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள். வருகிற 23, 24-ந் தேதிகளில் இதற்கான நேர் காணல், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்துவிட்டு நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
தேவையான சான்றுகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை http://www.hal-india.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story