பெண் புலவர்கள்


பெண் புலவர்கள்
x
தினத்தந்தி 16 April 2018 2:50 PM IST (Updated: 16 April 2018 2:50 PM IST)
t-max-icont-min-icon

சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...

ங்க இலக்கியத்தில் 31 பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதிகப் பாடல்களை எழுதியவர் அவ்வையார்.  அவர் 59 பாடல்களை எழுதியுள்ளார்.

அதியமானுக்கும், நெடுங்கிள்ளிக்குமான போரை பாட்டுத்திறத்தால் தவிர்த்தவர் அவ்வையார்.

அற்றைத் திங்கள் பாடலை எழுதியவர்கள் பாரி மகளிரான அங்கை, சங்கவை.

ஆதிமந்தியார், கரிகால் சோழனின் மகள்.

ஆதிமந்தியாரின் கணவர் சேரன் ஆட்டனத்தி.

ஆதிமந்தி கதையை ‘சேரதாண்டவம்’ என்ற தலைப்பில் பாடியவர் பாரதிதாசன்.

கண்ணதாசனின் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ படைப்பே ‘மன்னாதி மன்னன்’ திரைப்படம்.

சோழ இளவரசன் கோப்பெரு நற்கிள்ளியின் மல்யுத்தத்தை பாடியவர் நக்கண்ணையார்.

சேரமன்னன் சேரலாதனைப் பாடி, அவனை மணந்தவர் நச்செள்ளையார்.

நச்செள்ளையார் காக்கைப் பாடியதால் காக்கை பாடினியார் ஆனார்.

இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண்பாற்புலவர் காக்கைப் பாடினியார், அந்த நூல் காக்கை பாடினியம்.

நச்செள்ளையார் கதையை ‘வில்லோடு வா நிலவே’ என்ற தலைப்பில் நாவலாக்கியவர் வைரமுத்து.

தாய், தந்தை, அரசன், மகன் கடமைகளை பாடியவர் பொன்முடியார்.

கணவனை, தமையனை இழந்து மகனையும் போருக்கு அனுப்பிய பெண்ணின் வீரத்தை பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.

ஒக்கூர் திருக்கோஷ்டியூருக்கு அருகிலுள்ளது.

பேயோட்டும் வெறியாடல் பற்றிப் பாடியவர், காமக்கண்ணியார்.

கார்கீரன் எயிற்றியார், வாடைப்புலவர் என்று சிறப்பிக்கப்படுகிறார். 

Next Story