காசநோயை கண்டுபிடிக்கும் எலிகள்!


காசநோயை கண்டுபிடிக்கும் எலிகள்!
x
தினத்தந்தி 16 April 2018 3:07 PM IST (Updated: 16 April 2018 3:07 PM IST)
t-max-icont-min-icon

எலிகளின் மோப்பசக்தி மூலம் காசநோய் பாதிப்பை அறியும் புதிய யுத்தியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தல் மற்றும் சளி பரிசோதனை ஆகியவற்றின் மூலம் காச நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. அதிகம் வளர்ச்சி அடையாத சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த பரிசோதனை மேற்கொள்வதற்கு வசதிகள் இருப்பதில்லை. அவர்களுக்கு எலிகளின் மோப்பசக்தி மூலம் காசநோய் பரிசோதனை செய்ய முடியும் என்கிறது தான்சானியா விஞ்ஞானிகள் குழு.

‘சிறு குழந்தைகளுக்கு எளிதாக சளி பரிசோதனை செய்ய முடியாது. இதனால் அவர்களுக்கு காசநோய் இருக்கிறதா? என்பதை அறிய தாமதமாகிறது. இது பாதிப்பை தீவிரமாக்கிவிடுகிறது, இதற்கு சரியான மாற்று வழி எலி பரிசோதனைதான்’ என்கிறது ஆராய்ச்சியை நடத்திய சோகோயின் வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

காசநோயை உருவாக்கும் மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியா ஒருவித வாசனையை வெளியிடுகிறது. அது நோயாளியின் சளியிலும் வெளிப்படும். 982 குழந்தை களிடம் உடல் சளியை எலிகளை நுகரச் செய்து ஆய்வு செய்தபோது 23 பேருக்கு நோய் இருப்பதை எலிபரிசோதனை உறுதி செய்தது. ஆய்வகப் பரிசோதனையில் 34 குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சளியில் உள்ள மைக்ரோபாக்டீரிய கழிவுகளை கண்டறியும்போது ஒளிரும் பட்டைகளை எலியின் உடலில் பொருத்தி இந்த ஆய்வு செய்யப்பட்டது. எலி பரிசோதனையில் 70 சதவீதம் வெற்றி கிடைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

Next Story