மிதித்தால் இயங்கும் வாஷிங்மெஷின்


மிதித்தால் இயங்கும் வாஷிங்மெஷின்
x
தினத்தந்தி 16 April 2018 3:11 PM IST (Updated: 16 April 2018 3:11 PM IST)
t-max-icont-min-icon

கனடாவைச் சேர்ந்த டிருமி நிறுவனம் மிதிசக்தியில் இயங்கும் இந்த வாஷிங் மெஷினை தயாரித்துள்ளது.

ஒரு தடவையில் 2.25 கிலோ துணியை துவைக்கலாம். துணியுடன், தேவையான தண்ணீர் மற்றும் சலவைத் தூள் சேர்த்துவிட்டு, பழைய தையல் எந்திர விசைபோல காலால் மிதித்துக் கொண்டிருந்தால் துணி சலவை செய்யப்படுகிறது. இதற்காக அதிக விசையையும் கொடுக்க வேண்டாம். சாதாரணமாக செயல்பட்டாலே போதுமானது. அளவில் சிறிய கருவியான இதை, சுற்றுலா மற்றும் பயணங்களின்போது உடன் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story