மூழ்கினால் எச்சரிக்கும் கடிகாரம்


மூழ்கினால் எச்சரிக்கும் கடிகாரம்
x
தினத்தந்தி 16 April 2018 3:21 PM IST (Updated: 16 April 2018 3:21 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீரில் விளையாடும்போது குழந்தைகள் ஆழமான பகுதிக்குள் சென்றுவிட்டால் எச்சரிக்கிறது இந்த டால்பின் அலாரம் கடிகாரம்.

கோடை கொளுத்துகிறது. தண்ணீரில் ஆட்டம்போட அனைவருக்குமே ஆசை வரும். அப்படி விளையாடும்போது குழந்தைகள் ஆழமான பகுதிக்குள் சென்றுவிட்டால் எச்சரிக்கிறது இந்த டால்பின் அலாரம் கடிகாரம். இங்கிலாந்தை சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஜான் பார்ஸ்டெட் இந்த கடிகாரத்தை உருவாக்கி உள்ளார்.

மூன்று பாகங்களைக் கொண்டது இந்த எச்சரிக்கை கருவி. குழந்தைகளின் கையில் கட்டிவிடும் கடிகாரம் போன்ற பட்டை, குளத்தில் மிதக்கும் எச்சரிக்கை கருவி, வீட்டில் பொருத்திக் கொள்ளக்கூடிய கருவி. கையில் பொருத்தியுள்ள பட்டை குழந்தை தண்ணீரில் மூழ்கினால் சிக்னல்களை குளத்திலும், வீட்டிலுமுள்ள ஏற்பி கருவிகளுக்கு அனுப்பும். மேலும் குளத்தில் மிதக்கும் கருவி அதிகபட்சம் 131 டெசிபெல் ஒலியை எழுப்பி எச்சரிக்கும். இது, ஒரு விமானம் எழுப்பும் ஒலிக்கு நிகரானது என்பதால் அனைவரும் எச்சரிக்கை அடைய முடியும். அதே நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் கருவியும் ஒலியெழுப்பும் என்பதால் பெற்றோர் ஏதாவது வேலையாக இருந்தாலும் எச்சரிக்கை அடையலாம். 150 மீட்டர் வரை இந்தக் கருவி வேலை செய்யும். அத்துடன் குளத்தில் மிதக்கும் கருவி, குழந்தை எந்த இடத்தில் மூழ்குகிறது என்பதையும் மிதந்தபடி காட்டிக் கொடுக்கும். இதனால் நம் பாசத்துக்குரிய குழந்தைகளை உடனே கண்டுபிடித்து காப்பாற்றலாம். இதற்காக டால்பின் அலாரம் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அந்த பொறியாளர், கிக்ஸ்டார்ட்டர் நிறுவனத்துடன் இணைந்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளார். 

Next Story