வீட்டில் வைத்திருந்த நகை-பணம் மாயம்: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


வீட்டில் வைத்திருந்த நகை-பணம் மாயம்: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 April 2018 3:45 AM IST (Updated: 17 April 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

வாடகை வீட்டில் வைத் திருந்த நகை, பணம் மாயமானது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி 80 வயது மூதாட்டி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது.

தேனி, 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக கண்ட மனூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி குருவம்மாள் (வயது 80) என்பவர் வந்து இருந்தார். அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த போலீசாரும் ஓடி வந்து குருவம்மாளிடம் விசாரணை நடத்தினர்.

கலெக்டரிடம் கொடுப்ப தற்காக அவர் கையில் ஒரு மனு வைத்து இருந்தார். அந்த மனுவில், ‘நான் விளக்குமாறு விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன். வாடகை வீட்டில் குடியிருந்து வந்தேன். ஊர், ஊராக சென்று விளக்குமாறு விற்பனை செய்து விட்டு 15 நாட்கள் கழித்து வந்து பார்த்தபோது, வாடகைக்கு இருந்த வீடு இடிக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் வைத்து இருந்த ¾ பவுன் தோடு, 3 பவுன் சங்கிலி, ரூ.5 ஆயிரம் ஆகியவை மாயமானது. இதுகுறித்து 3 பேர் மீது போலீசில் பலமுறை புகார் கொடுத்தேன். அதற்கு பலன் இல்லை. ஒரு மாதத்துக்கு முன்பு இதை கேட்ட போது, என்னை அடித்து துன் புறுத்தினர். நகை, பணத்தை எடுத்த 3 பேரிடம் இருந்தும் அவற்றை பெற்றுக் கொடுக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த மூதாட்டியை விசாரணைக் காக தேனி போலீஸ் நிலை யத்துக்கு போலீசார் அழைத் துச் சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story