பாலியல் வன்கொடுமையில் சிறுமிகள் கொல்லப்படுவது நாட்டுக்கு அவமானம் - கே.பாலகிருஷ்ணன் பேச்சு
பாலியல் வன்கொடுமையில் சிறுமிகள் கொல்லப்படுவது நமது நாட்டுக்கு அவமானம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை ரத்தினபுரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்காக போராடுகிற, வாதாடுகிற இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது. இந்த கட்சி வளர வேண்டும் என்கிற அக்கறையோடு மக்கள் எங்களுக்கு நிதியை வாரி வழங்குவதுதான் இந்த கட்சிக்கு கிடைத்திருக்கிற பெருமை. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளோடு நாங்கள் தோழமை கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்குகூட நாங்கள் ஆதரவை அளித்திருக்கிறோம்.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி வரலாற்றில் நாங்கள் ஆதரிக்காத கட்சி ஒன்று உண்டு என்றால் அது பாரதீய ஜனதா கட்சி தான். எங்களுக்கு அப் படியென்ன அந்த கட்சியின் மீது கோபம் என்றால் அது மற்ற கட்சிகளை போல வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. நாட்டின் பன்முகத்தன்மையை குழிதோண்டி புதைக்கும் கட்சி என்றே அதை நாங்கள் பார்க்கிறோம்.
எப்போதும் ராணுவம் சூழ்ந்துள்ள காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா என்ற இடத்தில் 8 வயது சிறுமியை கோவிலில் அடைத்து வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் வேதனையோடு இடம்பெயர்கிறார்கள். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் அதற்கு ஆதரவாக காஷ்மீரில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா மந்திரிகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்களை எப்படி மனிதத்தன்மை உள்ளவர்கள் என ஏற்றுக்கொள்ள முடியும்?
இதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் தலித் பெண் ஒருவர் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாள். தனது மகளின் பாதுகாப்பை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அவளின் தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது நாட்டுக்கு அவமானம்.
பாரதீய ஜனதா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எங்கள் கட்சிக்கு ஒரு பெருமை உண்டு என்றால் அது தேசவிரோத, மக்கள் விரோத கட்சியான பாரதீய ஜனதாவை நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்து போராடுவது தான். இந்த மண்ணை விட்டு பாரதீய ஜனதாவை விரட்டுகிற வரையில் இது தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கட்சி நிதியாக ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், அமிர்தம், எம்.கண்ணன், ஏ.ராதிகா, முன்னாள் எம்.பி. நடராஜன், வடக்கு நகர குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story