அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்ததை அடுத்து மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி, கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்தார். பின்னர் விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் எடுத்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கறவை மாடு, ஆடுகளை வளர்ப்பதன் மூலம் போதிய பொருளாதார முன்னேற்றத்தை அடையலாம். எனவே விவசாயிகள் வேளாண்மை பணிகளை செய்து வருவதுடன், கால்நடை வளர்ப்பை ஒரு இணைப்பு தொழிலாக செய்வதன் மூலம் போதிய வருமானத்தை பெறலாம். பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன், உதவி இயக்குனர் முகமதுநாசர், உதவி பொறியாளர் கண்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர் இப்ராம்ஷா, ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜ், நெற்குப்பை பேரூராட்சி முன்னாள் தலைவர் சஞ்சீவி, திருப்பத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சிதம்பரம், ஜெ.பேரவை நேரு, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூரில் கோடைகாலத்தையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு நீர்-மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்-மோர், தர்ப்பூசணி பழம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Next Story