கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற 5 பேர் கைது
கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கியுள்ளதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை ‘குறி’ வைத்து மர்மநபர் கள் சிலர் கஞ்சா, போதை காளான்களை விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கொடைக் கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா தலைமையில் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் போதை காளான் விற்றுக் கொண்டிருந்த மன்னவனூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 39), கண்ணன் புரத்தை சேர்ந்த ராமதாஸ் (37) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் களை கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் போதை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அப்சர்வேட்டரி பேரிபால்ஸ் சாலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கொடைக்கானல் கைகாட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (45), கண்ணன் (54), முத்து (34) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் போதை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story