தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
நிலத்தை கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் சாமிசெட்டிப்பட்டி அருகே உள்ள கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சித்தன், விவசாயி. இவர் நேற்று தனது குடும்பத்தை சேர்ந்த சிலருடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு குடும்பத்தினர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைபார்த்து அங்கு ஓடிவந்த போலீசார் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சித்தன் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சித்தன் மற்றும் குடும்பத்தினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் பூர்வீக நிலம் போலனஅள்ளியில் உள்ளது. அந்த நிலத்திற்கு சென்றுவரும் வழிப்பாதையை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அந்த நிலத்தை விலைக்கு கேட்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் நிலத்தை விலைக்கு தராவிட்டால் வழிப்பாதையை அடைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த துவரை பயிர் மற்றும் எங்கள் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். இதை தட்டிக்கேட்டபோது தாக்கினார்கள்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எங்கள் நிலத்தில் உள்ள கூரை வீட்டை இடித்துவிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மரசாமான்கள், உணவு தானியங்கள் என ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் எடுத்து சென்று விட்டனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி எங்கள் நிலத்தையும், உடமைகளையும் மீட்டு கொடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.
அதைதொடர்ந்து தீக்குளிக்க முயன்ற சித்தன் குடும்பத்தினரை, போலீசார் வேனில் ஏற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story