அருமணல் ஆலை பணிகள் மீண்டும் தொடக்கம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு


அருமணல் ஆலை பணிகள் மீண்டும் தொடக்கம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 17 April 2018 4:15 AM IST (Updated: 17 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சியில் நிறுத்தப்பட்ட அருமணல் ஆலை பணிகளை மீண்டும் விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலை உள்ளது.

இந்த ஆலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த ஆலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும், மாநில அரசின் போக்குவரத்து அனுமதி இல்லாததாலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த ஆலையின் மணல் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த ஆலையை மீண்டும் திறக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகுமார் எம்.பி, விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர்.

இதன்பலனாக அருமணல் ஆலைக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதி கிடைத்தது. இதுபோல் தமிழக அரசும் போக்குவரத்து அனுமதியை வழங்கியது.

இதையடுத்து நேற்று அருமணல் ஆலையில் மணல் சுத்திகரிப்பு பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி. கலந்துகொண்டு ஆலையின் பணிகளை தொடங்கி வைத்தார்.

ஆலையின் தலைவர் ஜனா, அதிகாரிகள் செல்வராஜ், பரத் மற்றும் மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், ஜெயலலிதா பேரவைத்தலைவர் கனகராஜன், அரசு வக்கீல் சந்தோஷ்குமார், நாகர்கோவில் நகர செய லாளர் சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகுமார் எம்.பி.க்கு ஆலை தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், ‘எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ஆலையின் முன் நுழைவுவாயில் அமைக்கப்படும்‘ என்றார். 

Next Story