பெண்களிடம் நகை பறித்த வழக்கில் கைதான வாலிபருக்கு மேலும் 26 வழக்குகளில் தொடர்பு
நாகர்கோவிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் கைதான வாலிபருக்கு மேலும் 26 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததால் நகை பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பெண்களிடம் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக மதுரை மாவட்டம் கீழகுயில்குடி ஸ்ரீனிவாசகாலனியை சேர்ந்த நீலகண்டன் (வயது 34) என்பவர் பிடிபட்டார்.
இதனையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சமீபத்தில் நாகர்கோவில் சற்குண வீதியில் நடந்து சென்று அபிராமசுந்தரி என்பவரிடம் 5¾ பவுன் நகையை பறித்தது நீலகண்டன் தான் என்பது தெரியவந்தது. இவர் மீது நேசமணிநகர் மற்றும் வடசேரி போலீஸ் நிலையத்தில் நகைப்பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளும், கோட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
நீலகண்டன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் வேலை தேடி நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். இங்கு பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். செலவுக்கு பணம் தேவைப்பட்டால் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக அவருடைய நண்பரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இருக்கிறார்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வலம் வரும் இவர், ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகையை பறித்து இருக்கிறார். இவர் நேசமணிநகர் பகுதியில் ஒரு பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டபோது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் அப்போது அவர் வந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் கண்காணிப்பு கேமராவில் சரியாக தெரியவில்லை. இதனால் அப்போது தப்பித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சற்குணவீதியில் அபிராமசுந்தரியிடம் நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றபோதும் கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவாகியிருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் தெளிவாக தெரிந்தது. உடனே மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நீலகண்டன் சிக்கிக்கொண்டார். விசாரணையில், மதுரை மாவட்டத்தில் இவர் மீது மேலும் 26 நகை பறிப்பு வழக்குகள் உள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

Related Tags :
Next Story