பேஸ்புக் தோழியை 4 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்தவர் கைது


பேஸ்புக் தோழியை 4 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்தவர் கைது
x
தினத்தந்தி 16 April 2018 10:25 PM GMT (Updated: 16 April 2018 10:25 PM GMT)

பேஸ்புக் தோழியை 4 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பேஸ்புக் தோழியை 4 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை பைதோனியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சப்பீர் ஹூசைன்(வயது36) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ‘பேஸ்புக்’கில் அறிமுகமானார். இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு அடிக்கடி பேசிவந்தனர். பின்னர் இருவரும் சந்தித்து கொண்டனர்.

அப்போது அந்த பெண்ணுக்கு சப்பீர் ஹூசைன் குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்து உள்ளார். அதை குடித்ததும் மயங்கிய அந்த பெண்ணை கற்பழித்து, செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து உள்ளார்.

பின்னர் அந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக அந்த பெண்ணை கற்பழித்து வந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த பெண் சம்பவம் குறித்து பைதோனி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்பீர் ஹூசைனை கைது செய்தனர்.

அந்த பெண் தனது புகாரில், சப்பீர் ஹூசைனின் தாய் மற்றும் சகோதரர் தன்னிடம் பணம் பறித்ததாகவும் தெரிவித்து உள்ளார். அவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story