இலங்கை அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேசுவரன் பேட்டி
தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேசுவரன் கூறினார்.
நெல்லை,
தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேசுவரன் கூறினார்.
சாமி தரிசனம்
இலங்கை வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேசுவரன், நெல்லை மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி உள்ளார். நேற்று காலையில் முதல்–அமைச்சர் விக்னேசுவரன் அங்கிருந்து காரில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு வந்தார்.
அவருக்கு கல்லூரி முதல்வர் நீலாவதி, துணை முதல்வர் விக்டோரியா, டாக்டர் சுபாஷ்சந்திரன் மற்றும் மாணவ–மாணவிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள அகஸ்தியர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் விக்னேசுவரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அடிப்படை வசதிகளை
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களின் உரிமையை மீட்டு எடுக்க இந்திய அரசு மேலும் உதவ வேண்டும். மேலும் தமிழகத்தில் முகாம்களில் தங்கி உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து மத்திய அரசு மீளாய்வு செய்யவேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் குறித்து இந்தியாவில் அரசியல் செய்வது பெரிய விஷயம் அல்ல?. அதுவும் ஒரு அரசியல்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story