பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை
பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வருகிற 20–ந் தேதி வரை ரூ.110–க்கு செய்யப்படும் டாப்அப்களுக்கு ரூ.110 மதிப்புள்ள டாக்டைம் வழங்குகிறது.
நெல்லை,
பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வருகிற 20–ந் தேதி வரை ரூ.110–க்கு செய்யப்படும் டாப்அப்களுக்கு ரூ.110 மதிப்புள்ள டாக்டைம் வழங்குகிறது. இச்சலுகை சி–டாப்அப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்அப்களுக்கு மட்டும் பொருந்தும்.
பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எல். பேக்காக 30–ந் தேதி வரை புது அன்லிமிடெட் டேட்டா பூஸ்டரை ரூ.248–க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 51 தினங்களுக்கு தினமும் 3ஜி.பி– 3ஜி டேட்டாவை பெறலாம்.
மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து பி.எஸ்.என்.எல்.–க்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணை மாற்றாமலேயே எம்.என்.பி. மூலமாக நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். 24 மணி நேரமும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவுடன் கூடிய பல்வேறு பிளான்களை பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குகிறது. மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து பி.எஸ்.என்.எல்.–க்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அருகில் உள்ள ரீடெய்லர் கடைகளிலும் ஆதார் எண் மூலம் நம்பரை பி.எஸ்.என்.எல்.–க்கு மாற்றிக் கொள்ளலாம். வருகிற 26–ந் தேதி வரை அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் மெகா மேளா நடக்கிறது. பொதுமக்கள் இந்த மேளாக்களில் கலந்துகொண்டு மறு இணைப்புகள், புதிய தரைவழி, பிராட்பேண்ட் மற்றும் 3ஜி செல்போன் இணைப்புகள், எம்.என்.பி. இணைப்புகள் பெறலாம். நாள்பட்ட பில்லிங் சம்பந்தப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
இந்த தகவலை, நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story