இருவேறு விபத்துகளில் சிறுமி உள்பட 2 பேர் சாவு
இருவேறு விபத்துகளில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த தெரசாபுரம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலா (வயது 26) இவர்களுடைய மகள் சாதனா (5). தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அதே பகுதியை சேர்ந்த உறவினருடைய மகன் வெகுல்ராஜ் (6). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் காலை கலா தெரசாபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சாதனாவையும், வெகுல்ராஜையும் மொபட்டில் அழைத்து கொண்டு தெரசாபுரம் கூட்டுச்சாலை அருகே சாலையை கடந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
இதில் கலா, சாதனா, வெகுல்ராஜ், ஆகியோர் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதனாவை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுமி சாதனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் பட்டாபி செட்டியார். இவரது மனைவி சாந்தா (65). இவரது மருமகள் தீபா. இவர்கள் இருவரும் மொபட்டில் வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் இவர்கள் வந்த மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது தாம்பரத்தில் இருந்து காஞ்சீபுரம் வந்த அரசு பஸ் சாந்தாவின் தலையில் ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தீபா மயிரிழையில் உயிர்தப்பினார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து சாந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story