பள்ளி மாணவியுடன் கொல்கத்தா செல்ல வாலிபர் முயற்சி: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
நெல்லையில் இருந்து பள்ளி மாணவியுடன் கொல்கத்தா செல்ல முயன்ற வாலிபர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
ஆலந்தூர்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீடுகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதனால் சுடலைமுத்து அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த மாணவிக்கு தாலி கட்டி சென்னை அழைத்து வந்தார். இந்நிலையில் தனது மகளை சுடலைமுத்து கடத்தி சென்றதாக பாளையங்கோட்டை போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இதனிடையே இருவரின் செல்போன் எண்ணையும் போலீசார் கண்காணித்த போது அது சென்னை விமான நிலையத்தை காட்டியது. உடனே பாளையங்கோட்டை போலீசார், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சுடலைமுத்துவுக்கு கொல்கத்தாவில் நண்பர்கள் இருப்பதால் கொல்கத்தா செல்ல முயற்சி செய்யலாம் என்றும் தெரிவித்தனர்.
உடனே விமான நிலைய போலீசார் கொல்கத்தா செல்லும் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்தவர்களின் பட்டியலை சோதனை செய்தனர். அப்போது அதில் சுடலைமுத்து, பள்ளி மாணவியின் பெயர் இடம் பெற்று இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுடலைமுத்து, மாணவியுடன் விமானத்தில் ஏற வந்தபோது விமான நிலைய போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இது பற்றி பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை போலீசாரும், மாணவியின் பெற்றோரும் சென்னை வந்தவுடன் அவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும், மேல்நடவடிக்கையை பாளையங்கோட்டை போலீசார் எடுப்பார்கள் என்றும் விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story