லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை போலீஸ் உதவி கமிஷனர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் மீது 3 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்பத்தூர்,
சென்னை திருமங்கலம் உதவி கமிஷனர் கமில்பாஷா அலுவலகத்தில் கடந்த 13-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு லபக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு திடீரென ஆய்வில் ஈடுபட்டது.
அப்போது கமில்பாஷாவுடன் அவரது அறையில் சென்னை கொரட்டூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் உதவி கமிஷனர் கமில்பாஷாவின் மேசையில் இருந்த ரூ.2½ லட்சமும், செல்வத்திடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
மொத்தமாக ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்தை கைப்பற்றிய போலீசார் அதிகாலை 4 மணி வரை உதவி கமிஷனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வேலை செய்த போலீசாரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் உதவி கமிஷனரும், அவருடன் இருந்த செல்வம் என்பவரும் பணம் குறித்து நம்பும்படியான பதில் அளிக்கவில்லை.
மேலும் திருமங்கலம் உதவி கமிஷனர் குறித்து வந்த ரகசிய தகவல்களை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் கமில்பாஷா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story