உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: தரம் இல்லாத குடிநீர் கேன்கள் பறிமுதல்
கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேன்கள் ஏற்றிச்சென்ற ஆட்டோக்கள் மற்றும் மினிவேன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் தரம் இல்லாமல் இருந்த குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர்,
சென்னையில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்களில் 20 லிட்டர் கேன்களில் விற்பனை செய்யப்படும் குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
செங்குன்றம், சோழவரம், அலமாதி ஆகிய பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் கேன்கள் சுத்தம் இல்லாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில், கொருக்குப்பேட்டை-தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடிநீர் கேன்கள் ஏற்றிச்செல்லும் மினிவேன்கள், லோடு ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது தரமில்லாமல் இருந்த குடிநீர் கேன்கள் மற்றும் தேதி குறிப்பிடாமல் இருந்த குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தரச்சான்று மற்றும் முத்திரை பதித்த குடிநீர் கேன்களை தான் வினியோகம் செய்யவேண்டும் என டிரைவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story