மதுராந்தகம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருட முயன்ற 3 பேர் கைது


மதுராந்தகம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருட முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2018 3:30 AM IST (Updated: 18 April 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம்- உத்திரமேரூர் சாலையில் வேடவாக்கத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு செல்போன் கோபுரத்தில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டு ஒலி எழுந்தது. உடனே நிர்வாகத்தினர் அருகில் உள்ள காவலாளிக்கு தகவல் தெரிவித்தனர். காவலாளி சென்று பார்த்தபோது பேட்டரி அறைக்குள் 3 பேர் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பேட்டரியை திருட முயன்றுள்ளனர். அவர்களை காவலாளி பேட்டரி அறைக்குள் வைத்து பூட்டினார்.

இது குறித்து காவலாளி மதுராந்தகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுராந்தகம் தர்மராஜ் கோவில் தெருவை சேர்ந்த தாண்டவமூர்த்தி (வயது 24), கார்த்திக் (31), திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கெடுங் காலூரை சேர்ந்த தியாகராஜன் (24) என்பதும் பேட்டரியை திருட முயன்றவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story