உசிலம்பட்டி அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
உசிலம்பட்டி அருகே 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கல்யாணக்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாராணி, சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார் உசிலம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியில் சோதனையில் ஈடுபட்ட போது, பெரியகருப்பன் மகன் வங்காரு என்ற சிவா (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் நவீன் ஆகியோர், வீட்டின் பின்புறம் 150 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்தநிலையில் சிவா உள்ளிட்ட 2 பேரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அதில் சிவாவை போலீசார் விரட்டி பிடித்தனர். நவீன் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 மூடைகளில் இருந்த 150 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் சிவாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். உசிலம்பட்டி பகுதியில் கஞ்சாவை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவோம் என்று கூறினார்.

Related Tags :
Next Story