ரெயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மதுரை,
இந்திய ரெயில்வேயில் பாதுகாப்பு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தண்டவாள பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. கேட் கீப்பர்களுக்கு ஆயிரம் ரூபாய் அலவன்சு வழங்க வேண்டும். கேட் கீப்பர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை ரெயில்நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மதுரை கோட்டத்தலைவர் பவுலின் தலைமை தாங்கினார்.
துணை பொது செயலாளர்கள் திருமலை அய்யப்பன், நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டச்செயலாளர் சங்கரநாராயணன், டிராபிக் கவுன்சில் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். முடிவில், பொதுக்கிளைத்தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story