முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை


முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 18 April 2018 3:15 AM IST (Updated: 18 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டியவருக்கு மதுரை 3–வது கூடுதல் சப்–கோர்ட்டில் 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் உதயசூரியன். அதே பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் முன் விரோதத்தில் உதயசூரியனின் மகன் முரளியை (வயது 27) கடந்த 2011–ம் ஆண்டு அரிவாளால் வெட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை மதுரை 3–வது கூடுதல் சப்–கோர்ட்டில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஜோசப் ஜாய், குமாருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார்.

Related Tags :
Next Story