காஷ்மீர் சிறுமி படுகொலையை கண்டித்து கோவையில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த படுகொலையை கண்டித்தும், சிறுமிக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கக்கோரியும் கோவையில் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் கோவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட பெண் வக்கீல்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.பின்னர் வக்கீல் தேன்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளை அரசு தப்ப விடக்கூடாது. அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக் கும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இதுபோன்ற செயலில் சிறுவர்கள் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நமது நாட்டில் நடக்காது. எனவே மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story