மகேந்திரமங்கலம் அருகே மினி வேன் கவிழ்ந்து உரிமையாளர் பலி


மகேந்திரமங்கலம் அருகே மினி வேன் கவிழ்ந்து உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 18 April 2018 4:15 AM IST (Updated: 18 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

மகேந்திரமங்கலம் அருகே மினி வேன் கவிழ்ந்து அதன் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ஏழுகுண்டன் (வயது 60). மினி வேன் உரிமையாளர். இந்த வேனில் அவரே டிரைவராக இருந்து வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று இவர் மாரண்டஅள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தைக்கு வேனில் வந்து கொண்டு இருந்தார். சி.எம்.புதூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் மினிவேன் வந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்குள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழுகுண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் இருந்து ஏழுகுண்டனின் உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story