பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகள் அகற்றம்


பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 18 April 2018 4:00 AM IST (Updated: 18 April 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்றக்கோரி பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றது. இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பாலக்கரை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

அகற்றப்படும்

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறும் போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து விளம்பர பதாகைகளும் அகற்றப்படும். தற்போது முதல் கட்டமாக பாலக்கரை முதல 4 ரோடு வரை உள்ள பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறினர்.


Next Story