மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு வந்தபோது சம்பவம்: பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி சாவு
மனைவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த போது பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி இறந்தார்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அசோக்குமாருடன், அவருடைய தாய் தெய்வானையும் வசித்து வருகிறார்.
அசோக்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் அசோக்குமார், வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது மது குடித்து விட்டு, மனைவி புவனேஸ்வரியுடன் தகராறில் ஈடுபடுவதோடு, அவரை அடித்து உதைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாத புவனேஸ்வரி கோபித்துக்கொண்டு அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரை சமாதானம் செய்து அழைத்து வருவதை அசோக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு சென்ற அசோக்குமார், புவனேஸ்வரியை அடித்து உதைத்துள்ளார். இதனால் உயிருக்கு பயந்துபோன புவனேஸ்வரி, அசோக்குமார் மீது பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அசோக்குமாரை விசாரணை செய்ய அவருடைய வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டில் அசோக்குமாரும், அவருடைய தாயார் தெய்வானையும் இருந்தனர். இதையடுத்து தனது தாயார் தெய்வானையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லுமாறும், தான் சிறிது நேரத்திற்கு பிறகு மோட்டார்சைக்கிளில் வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து முதலில் தெய்வானையை போலீசார் விசாரணைக்காக பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு புவனேஸ்வரி கொடுத்துள்ள புகார் குறித்து தெய்வானையிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்னர் அசோக்குமார் தனது மோட்டார்சைக்கிளில் பல்லடம் போலீஸ் நிலையம் புறப்பட்டார். அப்போது வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனையும் எடுத்து வந்ததாக தெரிகிறது. பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் திடீரென்று ஊற்றினார். பின்னர் உடலில் தீயை பற்றவைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பரவியது.
பின்னர் அபயக்குரல் எழுப்பியபடியே அசோக்குமார் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் ஓடினார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அசோக்குமார் போலீஸ் நிலையம் நோக்கி ஓடிவருவதை பார்த்ததும், அங்கு இருந்த பெண் போலீசார், அவர் போலீஸ் நிலையத்திற்குள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீஸ் நிலைய கதவை பூட்டிக்கொண்டனர். இதனால் போலீஸ் நிலைய வாசல் வரை ஓடிவந்த அசோக்குமார், அதற்கு மேல் ஓடமுடியாத அளவுக்கு உடல் கரிக்கட்டையானதால் போலீஸ் நிலைய வாசல் அருகே கீழே விழுந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் போலீஸ் சிவந்தி மட்டும் தண்ணீரை கொண்டு வந்து அசோக்குமார் மீது ஊற்றி தீயை அணைத்தார். இதில் சிவந்திக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அசோக்குமார் கீழே விழுந்த பிறகு போலீஸ் நிலையத்திற்குள் இருந்த பெண் போலீசார் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அசோக்குமாரையும், சிவந்தியையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அசோக்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அசோக்குமார் இறந்தார். பெண் போலீஸ் சிவந்தி, பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story