மும்பை மாநகராட்சி சார்பில் 23 சர்வதேச பள்ளிகள்
மும்பையில் வருகிற ஜூன் 15-ந்தேதி அன்று மாநகராட்சி சார்பில் 23 சர்வதேச பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.
மும்பை,
மும்பையில் மாநகராட்சி சார்பில் சர்வதேச பள்ளிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஜூன் மாதம் 15-ந்தேதி மும்பை பெருநகரத்தில் 23 சர்வதேச பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி பிரகாஷ் சாரட்டே கூறியதாவது:-
மும்பை பெருநகரத்தில் திறக்கப்பட உள்ள சர்வதேச பள்ளிகளை நிர்வகிப்பதற்கு மாநகராட்சி பள்ளி முதல்வர்கள் 75 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச பள்ளிகளில் பணிபுரிய இருக்கும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு அடுத்த மாதம் பயிற்சி அளிக்கப்படும். பாடத்திட்டங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் சர்வதேச தரத்தில் இருக்கும். வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்த பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
சர்வதேச பள்ளிகளில் மராத்தி, இந்தி, உருது மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலும் இலவச கல்வி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story