விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் நகை திருட்டு


விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கோலியனூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஏம்பலம் கிராமத்தில் உள்ள பெருமாள்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்த போது, பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அங்கே பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் அவர் வைத்திருந்த 5½ பவுன் நகைகள் திருடு போயிருந்தது. ஆறுமுகம் வீட்டை விட்டு சென்ற நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அந்த நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது. திருடு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது பற்றி ஆறுமுகம் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story