தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி காத்திருந்து மனு கொடுக்கும் போராட்டம்
குன்றத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி காத்திருந்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரியும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட கோரியும், வேலை அட்டை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து படப்பையில் உள்ள குன்றத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருந்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் ஊர்வலமாக வந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் மோகனன் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் நேரு கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபுவிடம் வேலை கேட்டும், வேலைக்கான அட்டை, மற்றும் சம்பள பாக்கி கேட்டும், மொத்தம் 300 பேர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபு அனைவரது மனுக்களை கனிணி மயமாக்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Related Tags :
Next Story