நங்கநல்லூரில் பண மோசடி வழக்கில் மனைவியுடன் சினிமா தயாரிப்பாளர் கைது


நங்கநல்லூரில் பண மோசடி வழக்கில் மனைவியுடன் சினிமா தயாரிப்பாளர் கைது
x
தினத்தந்தி 19 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

நங்கநல்லூரில் பண மோசடி வழக்கில் மனைவியுடன் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். சினிமா பட துணை தயாரிப்பாளர். இவர், நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 51) என்ற சினிமா பட தயாரிப்பாளருடன் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆவிகுமார்’ என்ற சினிமா படத்தை எடுத்தார்.

பட தயாரிப்புக்காக வெங்கடேஸ்வரன் ரூ.40 லட்சத்தை கொடுத்தார். ஆனால் அந்த படத்தை வெங்கடேஸ்வரனுக்கு தெரியாமல் ஸ்ரீதரன் வெளியிட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்தயாரிப்புக்காக தான் கொடுத்த பணத்தை திரும்ப தராததுடன், படத்தில் கிடைத்த லாபத்தொகையையும் தராமல் ஸ்ரீதரன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணத்தை கேட்டு ஸ்ரீதரன் வீட்டுக்கு வெங்கடேஸ்வரன் சென்றார். ஆனால் அங்கிருந்த ஸ்ரீதரன் மற்றும் அவருடைய மனைவி புஷ்பலதா (45) ஆகியோர் வெங்கடேஸ்வரனை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையில் ஸ்ரீதரன் மற்றும் அவருடைய மனைவி மீது நடவடிக்கை எடுக்க வெங்கடேஸ்வரன் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பெற்று வந்தார்.

இதையடுத்து பழவந்தாங்கல் போலீசார் பணம் மோசடி மற்றும் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து சினிமா தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மற்றும் அவருடைய மனைவி புஷ்பலதா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Next Story