ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு: மத்திய அரசு மீது விக்கிரமராஜா குற்றச்சாட்டு
ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு என்பது வரும் காலத்தில் அந்நிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், உள்நாட்டு வணிகத்தை மூட்டைகட்டுவதற்குமான ஒரு ஏற்பாடு என மத்திய அரசு மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டினார்.
தாம்பரம்,
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ‘இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு’ குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா, நிர்வாகிகள் பிரபாகரன் ஹாஜா, சேகர், அமல்ராஜ், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விக்கிரமராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 35-வது வணிகர் தின மாநில மாநாடு ‘இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக’ வேலப்பன்சாவடியில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதில் பல லட்சம் வணிகர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தமிழக வணிகர்கள் மிக நலிந்து, சிரமப்பட்டு வாழ்க்கையை ஓட்டக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு சட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிறார்கள். அதை மீட்கும் வகையில்தான் மாநாட்டுக்கு அந்த தலைப்பு வைத்து உள்ளோம்.
தற்போது நாடு முழுவதும் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. வரும் காலத்தில் அந்நிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், உள்நாட்டு வணிகத்தை ஒட்டு மொத்தமாக மூட்டைகட்டுவதற்கும் ஒரு ஏற்படாக இந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குற்றம் சாட்டுகிறது.
டிஜிட்டல் இந்தியாவுக்கு இன்னும் வியாபாரிகள் தயாராகவில்லை. பணப்புழக்கம் குறைந்தால் வணிகம் முழுமையாக குறைந்துவிடும். எனவே ஏ.டி.எம்.களில் நிலவும் பணப்பற்றாக்குறையை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story