கொட்டிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவி கொலை வழக்கில் தொழிலாளி கைது
கொட்டிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவியை கொலை செய்த வழக்கில் பீகார் மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூா்,
சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலை ராமலிங்க நகர் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி (வயது 65). இவருடைய மனைவி வள்ளிநாயகி (57). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாகுடி ஆகும்.
இவர்களுடைய மகள் சுமதி, கணவருடன் கனடாவில் வசித்து வருகிறார். மகன் அருண்குமார் பெங்களூரிலும், மற்றொரு மகன் குமார் மேடவாக்கத்திலும் வசித்து வருகின்றனர். 3 மாடிகள் கொண்ட வீட்டின் 3-வது மாடியில் மாயாண்டி தனது மனைவி வள்ளிநாயகியுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டின் மற்ற தளங்களை தங்கும் விடுதியாக நடத்தி வந்தார். அதில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மாயாண்டியை பார்க்க அவரது உறவினர்கள் வந்தனர். அப்போது வீட்டின் உள்ளே மாயாண்டி, அவருடைய மனைவி வள்ளிநாயகி இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமிஷனர் ரோகித்நாதன் மற்றும் துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை வழக்கில் துப்புதுலக்க தென்சென்னை மதுவிலக்கு கூடுதல் துணை கமிஷனர் குமார் தலைமையில் உதவி கமிஷனர்கள் சுப்புராயன், லோகநாதன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், மகேஷ்குமார், பாஸ்கரன், புஷ்பராஜ், கிரிஸ்டின் ஜெயசீல், சுந்தர், சிவகுமார் உள்பட போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வள்ளிநாயகியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இந்த கொலைக்கு காரணம் சொத்து தகராறா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
அப்போது அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, அதில் சம்பவத்தன்று ஒருவர் வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டு பரபரப்பாக வெளியேறும் காட்சி பதிவாகி இருப்பதை கண்டனர்.
கேமராவில் பதிவான அந்த நபர் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர், எண்ணூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த கம்ரூல்ஆலம் (33) என தெரியவந்தது. அவர் மாயாண்டி வீட்டில் தரைகளில் ‘டைல்ஸ்’ பதிக்கும் பணியில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார், அத்திப்பட்டுக்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த கம்ருல்ஆலமை கைது செய்தனர். அவரை துரைப்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் கம்ருல்ஆலம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கொட்டிவாக்கத்தில் உள்ள மாயாண்டி வீட்டில் ‘டைல்ஸ்’ பதிக்கும் பணியில் ஈடுபட்டேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த பணியை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அதன்பிறகு ‘டைல்ஸ்’ பதிக்கும் பணியை முடித்துவிட்டு அதற்கான கூலி தொகை ரூ.28 ஆயிரம் தரும்படி கேட்டேன். ஆனால் பணத்தை தராமல் அவர் காலதாமதம் செய்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று மாயாண்டியிடம் கூலியை கேட்கும்போது, நீ சரியாக வேலை செய்யாததால் பணத்தை தரமுடியாது என்று கூறினார். இதனால் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்து நான், அங்கிருந்த கட்டையால் மாயாண்டியை அடித்துக்கொன்றேன். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததை பார்த்து ஓடிவந்த அவருடைய மனைவி வள்ளிநாயகியையும் அடித்துக்கொன்று விட்டு அவர் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த மணிபர்சை எடுத்துச்சென்று விட்டேன். அதில் ரூ.12 ஆயிரம் இருந்தது.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கம்ருல்ஆலமிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கூடுதல் துணை கமிஷனர் குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரை இணை கமிஷனர் மகேஸ்வரி வெகுவாக பாராட்டினார்.

Related Tags :
Next Story