வட மாநில ஆர்டர் குவிவதால் பட்டாசு உற்பத்தி தீவிரம்


வட மாநில ஆர்டர் குவிவதால் பட்டாசு உற்பத்தி தீவிரம்
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

வட மாநில பண்டிகைகளுக்காக ஆர்டர்கள் குவிவதால் பட்டாசு உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.

தாயில்பட்டி.

பட்டாசு தொழில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வரும் சூழலில் வட மாநிலங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பண்டிகைகள் கொண்டாடப்பட இருப்பதால் அங்கிருந்து ஆர்டர்கள் குவிகின்றன. இதனால் ஆலைகளில் உற்பத்தி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏற்கனவே வேலை நிறுத்தம் நடந்ததால் கையிருப்பு இல்லாததால் உற்பத்தியை முடுக்கி விட்டுள்ளனர்.

இதனால் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ள தொழிலாளர்களும் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்றிருப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதும் அதிகரித்து வருகிறது. விபரீதத்தை உணராமல் இரவு வேளைகளில் கூட சிவகாசியை சுற்றியுள்ள சில கிராமங்களில் பட்டாசு தயாராகிறது. முறைப்படி அனுமதிபெற்று தயாரிக்கப்படும் ஆலைகளில் வாங்குவதை விட இங்கு மலிவான விலை கிடைப்பதால் சில வியாபாரிகள் இவர்களை நாடும் நிலை உள்ளது.

எனவே அதிகாரிகள் கண்துடைப்புக்கு கண்காணிப்பு பணியை மேற்கொள்ளாமல் பெரிய அளவில் விபரீதம் நிகழாமல் இருக்க முறையாக கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உரிய அறிவுரை வழங்கியுள்ள நிலையில் அனைத்து துறையினரும் இதில் உரிய அக்கறை செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story