கொம்யூன் பஞ்சாயத்துகளில் மீண்டும் மதுக்கடைகளை திறந்தால் கலால்துறைக்கு பூட்டு போடுவோம், தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை
கொம்யூன் பஞ்சாயத்துகளில் மதுபானக்கடைகளை மீண்டும் திறந்தால் கலால்துறைக்கு பூட்டு போடுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரித்துள்ளது.
புதுச்சேரி,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிருமாம்பாக்கம், முள்ளோடை மற்றும் மூலக்குளம் முதல் மதகடிப்பட்டு வரை இருந்த 18 மதுக்கடைகள் மற்றும் சாராயக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது. வேறு இடத்தில் மதுக்கடைகளை திறந்து அதன் உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த மறுஉத்தரவில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மதுக்கடை திறக்க தடையில்லை என்று கூறியது. இதன் அடிப்படையில் புதுச்சேரி நகராட்சிகளில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டன.
தற்போது கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நகராட்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளது எனக்கூறி புதுச்சேரி சட்டத்துறை மூலம் அனுமதி பெற்று அங்கு மீண்டும் மதுக் கடைகளை திறப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் விபத்துக்கள் அதிகரிக்கும். எனவே இந்த முயற்சியை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும்.
அதையும் மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறந்தால் அந்த பகுதி மக்களை திரட்டி கலால்துறைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம். கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story