ராமேசுவரத்தில் கள்ளத்தனமாக மது விற்ற 3 பேர் கைது


ராமேசுவரத்தில் கள்ளத்தனமாக மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2018 3:30 AM IST (Updated: 19 April 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் கள்ளத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.142 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கல்விக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த மதுக்கடைகள் ஐகோர்ட்டு உத்தரவின்படி அகற்றப்பட்டன. இதன்படி ராமேசுவரத்தில் 7 கடைகளும், தங்கச்சிமடத்தில் 2 கடைகளும், பாம்பனில் ஒரு டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டது. பாம்பனில் மட்டும் 2 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மதுபான பிரியர்கள் தினமும் பாம்பனுக்கு வந்து மது அருந்தி செல்ல வேண்டிய நிலை இருந்து வரு கிறது. இதனை பயன்படுத்தி ஏராளமானோர் பாம்பனில் இருந்து மதுபானங்களை வாங்கிச்சென்று தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக ராமேசுவரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், அருண்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரெயில்வே பீடர் ரோடு உள்பட சந்தேகப்படும்படியான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த ராமேசுவரத்தை சேர்ந்த களஞ்சியம், நம்புவேல், நாகாச்சியை சேர்ந்த அலெக்ஸ் ஆகிய 3 பேரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 142 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story