கரூர் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என கரூர் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
கரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
8 கோடி மக்களின் ஜீவதார பிரச்சினைக்காக நாம் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த திட்டங்களையும் வழங்காமல் மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்.
அரசு அதிகாரிகள், போலீசார் நடுநிலை தவறி செயல்பட்டால் வருங்காலத்தில் நிச்சயம் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும். கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று தடைபெறுகின்றனர். காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் செயல்திட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்ற போது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி விளக்கம் பெறவில்லை. வருமான வரி சோதனை, ஆட்சி போய்விடும் பயத்தில் கேட்காமல் விட்டுவிட்டனர். தமிழகத்தில் நடக்கிற ஆட்சி மக்கள் விரோத துரோக ஆட்சி. இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகள் நடுநிலை தவறி செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அடுத்த மாதம் கிராமம், கிராமமாக, தெருத்தெருவாக சென்று மக்களை சந்திப்போம். கரூரில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஊழல்வாதிகள், அவர்களுக்கு துணைபோகிற அதிகாரிகள் பற்றி எடுத்துரைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.லோகநாதன், கரூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர்கள் தாரணி பி.சரவணன், மாலதி நல்லுசாமி, மாவட்ட பொருளாளர் பி.கே.எஸ்.முரளி, கரூர் மத்திய நகர செயலாளர் ஆர்.எஸ்.ராஜா, கரூர் வடக்கு நகர செயலாளர் எம்.தங்கவேல், கரூர் தெற்கு நகர செயலாளர் நாச்சிமுத்து மோகனசுப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாங்கல் பி.பாலமுருகன், காதப்பாறை ஏ.தங்கவேல், மண்மங்கலம் ஏ.காளியப்பன், ஊராட்சி செயலாளர்கள் எம்.எஸ்.வடிவேல், கிருஷ்ணன், முருகையன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேப்ளாபட்டி மணிமாறன், நெய்தலூர் முத்துகுமரன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சேவகன், ஒன்றிய பேரூராட்சி செயலாளர் பந்தல் பாலு, அவைத்தலைவர் முருகேசன், கடவூர் டி.எஸ்.கண்ணன், கடவூர் உமாமகேஸ்வரி கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வி.கே.வேலுசாமி, பிரநிதி நவ்ரங் கரூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெறுவதை போல கவர்னர் ஒரு மாயை உருவாக்கி கொண்டிருக்கிறார். தமிழக அரசும் எதுவும் கேட்காமல் உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி தனது பேச்சில் கவர்னரே தனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் விசாரணைக்காக ஒரு குழுவை கவர்னரே அமைக்கிறார். நிர்மலாதேவி மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி பயன் இல்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.
பேராசிரியையின் பேச்சில் உயர் அளவில் உள்ளவர்கள் என குறிப்பிட்டிருக்கிறார். அந்த உயர் அளவில் என்பது அரசியல்வாதிகளா?, அதிகாரிகளா? என்பதை விசாரிக்க வேண்டும். பெண் நிருபரின் கண்ணத்தை தடவி கவர்னர் தன் தகுதியை இழந்து விட்டார். அந்த பெண் நிருபரே கவர்னரின் செயலை விமர்சித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னர் முதல்–அமைச்சரை போல மாநிலம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இல்லாததை கவர்னர் செய்து வருகிறார்.
கவர்னர் அவரது வேலையை தவிர்த்து தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். கடந்த 6 மாதமாக கவர்னரின் செயல்பாடு சரியில்லை. பேராசிரியை விவகாரத்தில் கவர்னரை திரும்ப பெற்றால் தான் தமிழகத்திற்கு நல்லது. கவர்னர் பதவிக்கும், மத்திய அரசுக்கும் மரியாதை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story