ரூ.13.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மலர்விழி வழங்கினார்
சித்தேரியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 235 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சித்தேரி மலைகிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்தினார். இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
முன்னதாக வருவாய்த்துறையின் சார்பில் பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், விபத்து நிவாரணம் மற்றும் இயற்கை மரணம் நிவாரணம், மண்வள அட்டை, கால்நடைத்துறை சார்பில் தாது உப்பு என மொத்தம் 235 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த முகாமில் உதவி கலெக்டர் பத்மாவதி, தனித்துணை கலெக்டர் முத்தையன், இணை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் விமலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், கலால் உதவி இயக்குநர் மல்லிகா, தாசில்தார் சித்ரா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் உள்பட அரசு துறைஅலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story