அட்சய திருதியையொட்டி 12 பெருமாள் கருட சேவை திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி நேற்று 12 பெருமாள் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்,
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதி அட்சய திருதியை ஆகும். ஆண்டுதோறும் இந்த அட்சய திருதியை நாளில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை நடைபெறுவது வழக்கம். இதில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களில் இருந்து கருட வாகனங்களில் 12 பெருமாளும் ஒருசேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் 12 பெருமாள் கருடசேவை நிகழ்ச்சி நேற்று கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் காசிக்கடை தர்ம வர்த்தகர் சங்கம் சார்பில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
சாரங்கபாணிசாமி, சக்கரபாணிசாமி, ராமசாமி, ஆதிவராகசாமி, ராஜகோபாலசாமி, பாட்சாரியார் தெரு கிருஷ்ணசாமி, வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமசாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசாமி, மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசாமி, புளியஞ்சேரி வேணுகோபாலசாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசாமி, மேலக்காவிரி வரதராஜ பெருமாள் ஆகிய 12 பெருமாளும் கருட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கார பந்தலில் எழுந்தருளினர்.
பெருமாளின் கருட வாகனங்களுக்கு எதிரே ஆஞ்சநேயரும் எழுந்தருளி அருள்பாலித்தார். 12 பெருமாளும் அலங்கார பந்தலுக்கு வந்த உடன், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story