புயலில் நடைபெறும் ஆப்பிள் அறுவடை..!


புயலில் நடைபெறும் ஆப்பிள் அறுவடை..!
x
தினத்தந்தி 20 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 12:27 PM IST)
t-max-icont-min-icon

ஆப்பிள் அறுவடை காலங்களில் மழை வேண்டி, அயர்லாந்தில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெறும்.

யர்லாந்து நாட்டை அடிக்கடி புயல்கள் பதம் பார்ப்பதுண்டு. அந்த சமயங்களில் வீடு, கடை, படகு போன்ற பொருட்கள் பலத்த சேதத்தை சந்திக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், ஆப்பிள் தோட்ட விவசாயிகள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏன் தெரியுமா...? பல நூறு ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் ஆப்பிள் பழங்களை பறிப்பது என்பது பல வாரங்களை தாண்டுமாம். ஆனால் புயல் மழைகள் இந்த பணியை எளிதாக்கிவிடுகின்றன. பேய் காற்றுடன், பெய்யும் புயல் மழையில் சிக்கும் ஆப்பிள்கள் தானாகவே உதிர்ந்து தரைப்பகுதியில் விழுந்துவிடுகின்றன. அதனால் ஆப்பிள் அறுவடை காலங்களில் மழை வேண்டி, அயர்லாந்தில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெறுமாம். அப்படி விவசாயிகளின் வேண்டுதல்கள் பலிக்கும்பட்சத்தில் புயல் மழை உருவாகி, ஆப்பிள்களை இயற்கையாகவே அறுவடை செய்து கொடுக்கின்றன. அந்தசமயத்தில் ஆப்பிள் பழ போர்வை பூமியில் போர்த்தப்பட்டது போல காட்சியளிக்குமாம். 

Next Story