வித்தியாசமான மாஸ்டர்!


வித்தியாசமான மாஸ்டர்!
x
தினத்தந்தி 20 April 2018 3:15 AM IST (Updated: 19 April 2018 12:55 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் கார்களை நிறுத்திவிட்டு, நிம்மதியாகச் செல்ல இயலாது. அங்கே கார்கள் திருடு போவது சர்வசாதாரணம்.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் சமீப காலமாக கார்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதாம். அதற்கான காரணம் லோலோ என்ற கராத்தே பெண்.

கராத்தே மாஸ்டரான லோலோ, தைவானைச் சேர்ந்தவர். கராத்தே உடைகளை அணிந்துகொண்டு, கராத்தே கலைகளைச் செய்து காட்டியபடி ஹாரிங்டன் சாலையில் உள்ள உணவக வாசலில் நிற்கிறார். இதனால் கார் திருடர்கள் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. மகிழ்ந்து போகும் கார் உரிமையாளர்கள் மாஸ்டர் லோலோவுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்கிறார்கள்.

‘‘ஆரம்பத்தில் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மக்கள், இன்று ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள். திருடர்களிடமிருந்து கார்களைப் பாதுகாக்கும் பணி எனக்கும் பிடித்திருக்கிறது, மக்களுக்கும் பிடித்திருக்கிறது’’ என்கிறார் லோலோ.

‘‘மாஸ்டர் லோலோ இருப்பதால் எங்களால் நிம்மதியாகச் சாப்பிட முடிகிறது, நீண்ட நேரம் ஷாப்பிங் மாலில் சுற்ற முடிகிறது. லோலோ வந்த பிறகு கார்கள் திருடு போகவில்லை. யாராவது பிரச்சினை செய்ய வந்தால், அவர்களுக்கு லோலோ தக்கப்பாடம் கற்பிக்கிறார்’’ என்கிறார்கள் லோலோ ரசிகைகள்.

பொதுமக்கள் தாராளமாக லோலோவுக்குப் பணம் அளிப்பதால், சக ஊழியர்கள் இவருக்குச் சேரவேண்டிய டிப்ஸ்களைக் கூட அளிப்பதில்லை. அதை லோலோவும் கண்டுகொள்வதில்லை. 

Next Story